தமிழ்பாட்டு

அசையாத காற்றிலை
இனிக்காத பாட்டிலை
சுவைக்காத அமுதம்போல்
சுவைகூடும் தமிழ்பாட்டு

தித்திக்கும் கரும்பாக
தேன்கின்னம் மழையாக
செவ்வானம் திறந்துபோல்
செந்தூர தமிழ்பாட்டு

தெருவெல்லாம் ஒளிவீச
பகல்லெல்லாம் கவிபேச
பனைவெல்லம் கிடைத்தால்போல்
பகடையும் பேசும் தமிழ்பாட்டு

செவ்வாழை கீற்றில்
செந்தாமரை மொட்டில்
குயில்கானம் கேட்டால்போல்
குளிராத தமிழ்பாட்டு

மீன்கொத்து இசையான
தமிழ்முத்து கடலான
பனிதுளி சிதைந்துபோல்
பனியாத தமிழ்பாட்டு

குழந்தைவாயில் தேன்னெடுத்து
அல்லிபூ நான்கொடுத்து
பூக்கள் எல்லாம் மலர்ந்ததுபோல்
புகழ் சூடும் தமிழ்பாட்டு

கண்மனி பேச்சாக
கவிமனி மூச்சாக
களையாத நினைவுபோல்
களைந்தாடும் தமிழ்பாட்டு...!!!

எழுதியவர் : காந்தி. (27-Jun-13, 10:51 am)
பார்வை : 476

மேலே