உன்னாலே முடியும்

மாமாங்கம் பல கண்ட
மகத்துவம் நிறைந்த பூமியில்
சாதிக்க பிறந்தவன் நீ
சோதனைக்கு அஞ்சலாமா ............

ஆயிரம் தடைகள் வரலாம்
அதில் சில தோல்விகளும் வரலாம்
துன்பங்களை கண்டு நீ
துவண்டு போகலாமா .............

இன்றோடு உலகம் அழியபோவதில்லை
இன்றோடு நீ மடியப்போவதுமில்லை
நாளை என்பது நிச்சயம் இருக்கு
நம்பிக்கை கொண்டு நீயும் வாழ் ..............

அகல விரிந்த இந்த பூமியில்
ஆயிரம் சாதனைகள் காத்துகிடக்கு
ஒன்றில் தோற்றால் என்ன மனிதா
இன்னொன்றை நீயும் நம்பி முயலு ..............

பழக பழக பக்குவம் பெறுவாய்
முயல முயல அனுபவம் அடைவாய்
முயற்சிக்க முயற்சிக்க வெற்றி பெறுவாய்
முயன்று பார் உன்னால் முடியும் .............

உண்மையான உழைப்பு தோற்பதுமில்லை
நம்பிக்கை தூண்கள் சாய்ந்ததுமில்லை
நலம் உண்டென்று நம்பிக்கை கொண்டு
வளம் வா வெற்றி பெற்று .............

சரித்திர வெற்றிகளை படித்துபாரு
சாதித்தவர்களின் வரலாற்றை நீயும் கேளு
துணிவும் நம்பிக்கையும் துணையாய் இருந்த
உண்மை புரியும் உனக்கு மெல்ல ..............

உன்னாலே தொடரும் உந்தன் சாதனை
பிறரால் இல்லை தடைகள் என்றும்
பிறர்மேல் பழி சொல்லும் நிலையை மாற்றி
உன்னிடம் இருக்கும் தவறை திருத்து ............

விதியை நினைத்து காலம் கடத்தும்
மடமை உடைத்து சாதிக்க வா
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில்
உண்மையை உணரு நீயும் இன்றே .........

வெற்றியும் தோல்வியும் இணையாய் கொள்ளு
தோல்வி அடைவதில் இகழ்ச்சியும் இல்லை
வெற்றிபெறுவதில் புகழ்ச்சியும் இல்லை
இரண்டையும் என்றும் ஒன்றாய் பாரு .............

ஏளனம் செய்யும் இந்த உலகம்
ஏந்தி பிடிக்கும் உன்னையும் ஓர்நாள்
வருத்தம் கொண்டால் வாழ்க்கையே போகும்
திருத்தம் கொள் உந்தன் எண்ணத்தில் .............

தோல்வியின் கேள்வியே வெற்றியின் விடை
சோதனைகள் தான் சாதனை செய்யும்
வேதனை மறந்து விடியல் தேடி
விரைந்து வா வெற்றியை சொந்தமாக்கு !

எழுதியவர் : வினாயகமுருகன் (27-Jun-13, 11:16 am)
Tanglish : unnale mudiyum
பார்வை : 151

மேலே