உலகமும் கலகமும்
காட்டு தீ
கடல் கொண்ட கர்வம்
உடையப் போகும் பூமி
கிழிந்து சிரிக்கும் வானம்
கொன்று குவிக்கும் பார்வை
நான் நான் லட்சியம்
நீ நீ அலட்சியம்
விஷமும் விஷயமும்
காற்றைக் கெடுத்த நல்லவர்கள்
தூங்கி திரியும் காவலர்கள்
புதை பட தேடும் பிணம்
விதையாக வாடும் சினம்
மாயாஜாலம் வித்தை
கை காட்டி கண் கட்டும்
பாம்பாட்டி
தேநீர் மது
மதுவில் மாது
மாதுவில் மயானம்
இடைஞ்சல் மாங்கல்யம்
மங்களம் திருவிழா
திருவிழா குத்தகை
பார்ப்பவர் நடிக்கும்
மேடை நாடகம்
பூப்பறிக்க வருவது
பறிக்கப்பட்ட பூக்கள்
வேடிக்கை பார்க்க
நன்றாகத்தான் இருக்கிறது
உலகமும் கலகமும்