விவாகம் ரத்தாகிறது
பிணக்கு ஆரம்பாமாகிறது மெதுவாக
கணவனும் மனைவியும் அடித்துக் கொள்ளுகிறார்கள் சத்தமில்லாமல்
குழந்தை பார்த்துக் கொண்டிருக்கிறது.
சண்டை தொடர்கிறது வேகமாக
இருவரும் மோதிக் கொள்ளுகிறார்கள் மிகக் கோபமாக
குழந்தை பயத்தில் அழுகிறது .
வெகுண்ட சினம் முற்றுப் பெறுகிறது.
தம்பதிகள் பிரிகிறார்கள் சற்றுக் கூட சிந்திக்காமல்
குழந்தை தவியாகத தவிக்கிறது .