சு.ப. உதயகுமார்

இயற்கைப் போற்றும்
கொற்கை வேந்தன்

கொள்கைப் போற்றும்
தமிழ்த்தேசிய மாந்தன்

தமிழினம் போற்றும்
தளரா விடுதலை வேங்கையவன்

தற்குறிகள் அஞ்சும்
தகைமைக் காவலன்

தமிழர் நிலம் காக்க
வறியவர்க்கு வலிமையாய் உதயமானவன்

உலகில் விடுதலைக்கு
ஒப்பில்லா பாடம் இவன்

தமிழரை ஒன்று சேர்த்த
தரமான பசையானவன்

தமிழ் இனத்தின் விடுதலைக்கு
தன்னிகரில்லா முன்னோடியானவன்

தமிழர் உதடுகள் யாவும்
அண்ணன் என்னும் உறவுக்கு உரித்தானவன்

உரிமை வெல்லத் துடிக்கும்
ஊழியத்தை செய்பவன்

இருக்கை மீது ஆசைக்கொண்டு
இயற்கை கொள்ளும் அமைச்சனுக்கு பேரிடி தருபவன்

எழுதியவர் : தமிழ்முகிலன் (29-Jun-13, 9:33 am)
சேர்த்தது : thamizhmukilan
பார்வை : 90

மேலே