கண்கண்ட தெய்வம்

ஓடிப் பிடித்தும் கட்டிப் பிடித்தும்
விளையாடிய விளையாட்டு
குப்பைத் தொட்டியில் விழுந்தது
குழந்தயாக.

மனமும் மனமும் கலந்து
மகிழ்ந்திருந்தால் அது
மழலையாய் மலர்ந்திருக்கும்
இர்ருவர் மடியில்.

இதுவோ உடலும் உடலும்
ஒட்டிக் கலந்த உறவு
எனவே கொட்டப் பட்டது
குப்பைத் தொட்டியில் .

களங்கமான பெற்றோருக்கும் பிறந்த
களங்கமற்ற மழலை இங்கே
முக்கி முனகுகிறது குப்பைத்தொட்டியில்.

கவலைப்பட்டு கண்ணீர் வடிக்காதிர்கள்
காக்கைக்கும் நாய்களுக்கும்
மனிதக் கறிசோறு.

தலைமகள் குந்தி காட்டிய வழி .
அவள் ஆற்றில் விட்டாள் அன்பு மழலையை
தாகத்திற்க்கே தண்ணீர் கிடைக்காத
தமிழ்நாட்டில்
ஆறுக்கெங்கே போவது
குப்பைத் தொட்டிகளில்தான் இன்றைய
கர்ணன்களின் பிறப்பிடம்.

நிறைகாக்கும் மாந்தர் இன்று எவருமில்லை
குணம் கேட்ட மனிதனும் நால்வகை
குணம்விட்ட மாதரும் நிறைய உண்டு
கொண்டாடட்டும் குப்பைத்தொட்டிகள்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடம்
குப்பைத் தொட்டிதானா?
உலக மதவாதிகளே,
பக்தி நெறிபடரும் பக்திமான்களே,
ஆன்ம நெறி நிற்கும் ஞானியரே,
பேதம் ஒழிப்பீர் பேரருள் பெற
கட்டிப்பிடித்து தொட்டு வணங்குங்கள்
குப்பைத் தொட்டிதான் இனித் தெய்வம்........

எழுதியவர் : த.எழிலன் (1-Jul-13, 12:13 pm)
சேர்த்தது : vellvizhe
பார்வை : 79

மேலே