கிரிக்கெட்(டு) - C. சாந்தி

பொழுது போக்க வந்த கிரிக்கெட்டு
ஆட்டம் போடுதைய்யா இன்று தறிகெட்டு
வலம் வந்ததைய்யா வெற்றி நடைபோட்டு
கெட்டுவிட்டதைய்யா இன்று மதிகெட்டு...

பதினோரு மடையர்கள் விளையாட
பதினோராயிரம் மடையர்கள் காண்பரென்று
சொல்லி வைத்தார் அன்று பெர்னார்ட்ஷா
பள்ளி பாடத்தில் நானும் படித்ததுண்டு..

ஒளிப்பதிவு சாதனம் அன்றில்லை
ஒளி ஊடகங்கள் கண்டறியவில்லை
ஓடிய ஓட்டங்கள் கணக்கில் கொண்டு
அம்பயர் முடிவினில் ஆட்டம் அன்று....

பதினோரு மடையர்கள் விளையாட - இன்று
உலகே காணுது ஊடகத்தில்
காண்பவர் அத்தனை மடையர்களா?
காரியம் சாதிப்போர் அறிவாளிகளா?

விளையாட்டினில் வரும்படி போதாதா?
சூதாட்டத்திலும் பணம் தேடுவதா??
வெட்கம் கெட்டவர் விளையாட்டு - கண்டு
களிப்பவர்க்கே வைக்கும் அது வேட்டு...

சூதாட்ட சூட்சுமம் எண்ணிக்கையில்
ஒன்றா இரண்டா சொல்ல முடியவில்லை
தனவான்கள் பலபேர் கூட்டணியில்
களவாணிகள் அடிக்கும் பணமும் கொள்ளை...

வானம் பார்த்தால் பல இலட்சம்
கைக்குட்டை எடுத்தால் பல இலட்சம்
சூதாட்டத்தில் சமிஞ்கைகள் ஏராளம்
தரகரோடு தனவான்களும் கும்மாளம்...

வியர்வை துடைத்தால் சமிஞ்கையென்றும்
எச்சில் துப்பிட சமிஞ்கையென்றும் - இனி
எண்ணிட நமக்குத் தோன்றாதோ?
இந்த ஆட்டதிற்கேதான் அளவில்லையோ??

பாடல் எழுத அறை போட்டவர்கள்
கதை எழுத அறை போட்டவர்கள்
திரைத் துறையில் இது வழக்கந்தான்
கவிஞர்கள் யார்க்கும் இது பழக்கந்தான்...

ஐயோ... இன்று புதுக் கதையாய்
கிரிக்கெட் சூதாட்டத்திற்கே அறை போட்டு
பந்தயம் நடத்துது பெரும்பணத்தட்டு
பெருங்கூட்டம் ரசிக்குது இதனை மறந்திட்டு...

சாண்டிலா, சவானும், ஸ்ரீசாந்த்து
இவர்களை கண்டால் நீ சாத்து
சூதாட்டகார மா பாவிகள் - நாம்
எரிப்போம் அவர்களின் கொடும்பாவிகள்...

வெற்றிக்கே இல்லை இலட்சியங்கள்
சுய இலாபத்தினால் வந்த அலட்சியங்கள்
கிரிக்கெட் பைத்தியம் பிடித்தோர் கேளுங்கள்
விரட்டியடிப்போம் இந்த சூதாடிகள்...

எழுதியவர் : சொ. சாந்தி (1-Jul-13, 8:00 pm)
பார்வை : 332

மேலே