புத்தன் என்பவன்....

திசை வேண்டாத
பறவையாய்
ஒரு மாய பயணத்தில்
புன்னகை மாறாமல்
பயணிக்கிறான் அவன்....

அவனின்
கால் தடங்களில்
அன்பென்ற பூக்கள்
ஆகாயம் வரை
வளர்ந்து கொண்டேயிருக்கிறது.....

கேட்டதற்கு
புத்தனை தேடி
பயணம் என்றான்
தொடர்ந்தபடி.....

நன்றாக தெரியும்
போதியில் போதனை
சொன்ன புத்தன்
இவன் தானென்று....

இருந்தும் தன்னை
வெளியில் தேடுவதும்
தொடர்வதும்
எதற்கான தொடக்கம்
என்று
யோசித்தேன்....

சட்டென புரிந்ததில்
காலம் உதறி
கர்வம் உதறி
பின் தொடர்ந்தேன்,
ஒரு புத்தனாக.....

எழுதியவர் : கவிஜி (4-Jul-13, 2:35 pm)
பார்வை : 139

மேலே