வளை !...
வளைந்து கொடுத்தால்தான் வாழ்கை
வளையாது கைகள் இருந்தால்
வாயில் உணவு எப்படி ?..
நீட்டியபடியேதான்,
உறக்கத்தில்
கால்கள்யிருக்குமென
நிச்சயம் உண்டா ?....
நா மடங்காது வார்த்தைகள்
பிரசவம் ஆவதுண்டா ?...
நரம்புகள் எல்லாம்
நேர்கோடுகளாகவே உள்ளதா?...
நகையாத முகங்கள்
நன்றாக இருக்கிறதா?..
நேராகவே ஓடும் ஆறினை
நேரில் நீ கண்டதுண்டா ?..
நெட்டென வளர்ந்த மரத்தில்
இடிவிழாதுயென உருதியுண்டா?...
நீயும் வளைந்து கொடுத்துப்பார்
வாழ்கை வசப்படும் !...