மக்கள் அனைவரும் போற்ற வேண்டிய மகாத்மா
மண்ணில் வாழ்ந்த உத்தமர் இவரே
அடிமையை உடைத்த சத்தியவான் இவரே
உலகம் போற்றும் தலைவர் இவரே
அகிம்சை வழிவந்த அண்ணல் இவரே .......
அகிம்சை, வாய்மை இவரது ஆயுதம்
அன்பு ,அரவணைப்பு இவரது கொள்கை
நீதியும் நேர்மையும் இவரது மூச்சு
மக்கள் விடுதலை இவரது லட்சியம் ......
பிஞ்சுவயதிலே நல்ல கொள்கையும்
பள்ளி பருவத்திலே நல்ல ஒழுக்கமும்
நீதி போதனைகளை நெறியாய் கொண்டு
நீதிக்கு உழைத்த தலைவரும் இவரே ........
சட்டம் பயின்று சகலமும் கற்றார்
இனவெறிக்கொள்கையை எதிர்த்து நின்றார்
தன்னலம பாராத மனிதனானார்
சுதந்திர தேடலில் தன்னலம் மறந்தார் ............
எத்தனையோ கொடுமைகளை
இன்முகத்தோடு ஏற்றார்
எந்தநிலையிலும் வன்முறை தவிர்த்தார்
அமைதியாய் இருந்து அனைத்தும் பெற்றார் .....
இரும்புத்தூண்களும் வளைந்து கொடுக்கும்
இறுகிய நெஞ்சம் கொண்ட மனிதர் இவரே
துளைக்கும் தோட்டா இவருக்கு அஞ்சும்
வெடிக்கும் குண்டும் இவரிடம் மங்கும் ..........
இந்திய மக்களின் தந்தை இவரே
நன்றி மறக்காமல் நினைப்போம் அவரை
விட்டுசென்ற கொள்கையை நாமும்
உயிர்போல மதித்திடுவோமே ............
மண்ணில் மறைந்தும்
மனதில் மறையா தலைவர் இவரே
கொலைக்களம் பார்க்காத இவரது கொள்கையை
அனைவரும் மதிப்போம் அன்போடு வாழ்வோம் ...
நமக்காக போராடிய ஒப்பற்ற தலைவரை
நெஞ்சில் பதிப்போம் வாழ்வில் சிறப்போம்
போராடி வாங்கிய சுதந்திரம் அதை
பொறுப்போடு காப்போம் பொறுமை காப்போம் ........