இந்தியா வல்லரசாகும் ஏழை அரசு பள்ளி மாணவர்களால்...

இன்டர்நெட்,ஈமெயில் என்று தனது அறிவை தானே கூர்மை படுத்திக்கொள்ள ஆங்கில அறிவு மிக மிக அவசியம் என்பதை யாருமே மறுக்க முடியாது, அவ்வாறு மறுப்பவர்கள் இந்த எழுத்து.காம் இணையத்தளம் கூட நிச்சயம் பயன்படுத்த முடியாது.பல்லாயிரக்கணக்கான இளங்கலை, முதுகலை,பட்டம் பெற்று குறைந்த சம்பளத்திற்கும்,வேலை இல்லாமலும் இருப்பதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளி வழி வந்து ஆங்கில அறிவு புலமை இல்லாததே என்பதை என்னால்,நம்மால் நிச்சயம் கூற முடியும். ஏனென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் ஊக்குவிப்பு,ஆங்கிலத்திற்கு வரவேற்பு,ஏழை மாணவர்கள் பரிதவிப்பு. ஒரு ஏழை மாணவன் வாழ்கையில் உயரிய நிலையை அடைந்தால், அவனால் பல குடும்பங்கள் நிச்சயம் வாழும், ஏனென்றால் வெற்றி பெறுவதற்கு அவன் சந்தித்த பொருளாதார தடை கற்களை தகர்த்து எரிந்து, தன்னால் முடிந்த உதவிகளை, உறவினர்களுக்கும், சமுதாயத்திற்கும் நிச்சயம் செய்து படி கற்களாக இருப்பான். அரசு பள்ளி வழி வந்ததால், பத்தாம் வகுப்பிற்கு பிறகு தான் ஆங்கிலத்தில் கவனம் சிறிது செலுத்த ஆரம்பித்தேன், இன்று வரை சில வெற்றிகளை கண்டு வருகிறேன். நான் சிறிது வருத்தபடுகிறேன் இந்த எழுத்து.காம் வலைதளத்தை தாமதமாக வந்தடைதிருக்கிறேன் என்று. முன்பே வந்திருந்தால், அறிவிற்கு எட்டி இருந்தால், வெற்றி பாதைக்கு சுலபமான வழியாக இருந்திருக்கும். இப்போதும் ஒன்றும் இல்லை வெற்றியை நோக்கி வேகமாக பயணிக்க இந்த வாய்ப்பை நிச்சயம் பயன் படுத்திக் கொள்வேன்.என்னுடைய உளமார்ந்த நன்றியை இந்த எழுத்து.காம் யிற்கு தெரிவித்து கொள்கிறேன்.வரும் கல்வியாண்டு முதல் தொடக்க பள்ளிகள் முதலே ஆங்கில வழிகல்வி வகுப்புகளை விருப்பப்பட்டவர்கள் தேர்வு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்து அதை செயல் படுத்தி கொண்டிருப்பது நிச்சயம் ஏழை மக்களின் வாழ்கையில் அணையாத ஒளியை ஏற்றும், மேலும் இந்தியாவை வல்லரசாக்கும் என்பது உண்மை.ஏழை அரசு பள்ளி மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் சார்பாக தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு எங்கள் நன்றி...

எழுதியவர் : டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமார (4-Jul-13, 4:25 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 170

மேலே