என் காதலின் மருந்து விஷம்
நான் இழந்த அனைத்தையும்
உன்னால் கண்டிட ஆசை
ஆயினும் நீ இன்று எனக்காக இல்லை
உன் அவளின் வருகையை
நீ நினைத்தாய்
உனது விருப்பம் தெரியாமல் எனது
மனதை நான் பறிகொடுத்தேன்
உன் காதலுகாக என் காதலை விட்டு தர
இயலவில்லை - ஆயினும்
உன் கண்களில் கண்ணீரை காண எனக்கு துணிவு இல்லை
உன்னை தொடும் உன் நிழலினை வெறுக்க துணிந்த எனக்கு
உன் அவளை விரட்ட மனமில்லை
எனது மனதிற்கு தெரியும்
நீ என்னை விரும்பவில்லை என்று
ஆனாலும் என் இதயம்
தடம் மாறி செல்கிறது உன்னிடமே ......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
