காலம் பொன்போன்றது

பொன்போன்ற காலம்
பொழுதுபோக்காய் கழியலாமா
வீணான நேரங்களால் வாழ்க்கை
வீனாகிப்போகலாமா ?

ஒவ்வொரு நொடியும் பொக்கிஷம் போன்றது
அலட்சியம் மறந்து மதிக்க வேண்டியது
சாதனைகள் நிறைந்த நேரம் அதனை
விதியை சொல்லி கழிக்கலாமா .............

கடமையை மறந்து காலம் கடத்த
உன் லட்சிய பயணம் தொய்ந்து போகுது
நேரத்தை விரட்டும் மனிதனால் மட்டுமே
ஏற்றத்தை எளிதில் தொட்டுவிட முடியும் ..........

முயற்சித்து பார்த்தவர்கள் தோற்றதும் இல்லை
தோல்விகள் என்பதே முடிவும் இல்லை
கடவுளை பழித்து காலம் கடத்தும்
மடமையை ஒழித்து மீண்டும் முயற்ச்சி செய்........

போன காலம் திரும்ப வராது
விட்ட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்காது
சுக்கிர திசையே நடந்தாலும் கூட
உன் முயற்ச்சிகள் இல்லாமல் வெற்றி வராது ......

அதிர்ஷ்டம் என்பது உழைப்பால் தோன்றும்
துரதிஷ்டம் அது சோம்பலால் வரும்
உழைக்கும் உழைப்புக்கு நேரம் இல்லை
நேரம் பார்த்தால் வாழ்க்கை இல்லை ...........

ஒவ்வொரு நொடியும் கடத்தும் உன்னால்
சாதனைகள் நிறைய நிகழ்த்த முடியாது
உழைப்பை நம்பியவன் வாழ்வை வென்றான்
உழைக்க மறந்தவன் வாழ்வில் தோற்றான் .........

இதுவரை கடந்த காலம் போதும்
இனியாவது புரிந்து உன் நிலையை மாற்று
உழைத்து வாழ்பவனுக்கு நல்லநேரமே
சோம்பேறி மனிதனுக்கு கெட்டகாலமே !

எழுதியவர் : வினாயகமுருகன் (4-Jul-13, 9:07 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 301

மேலே