தலைப்பைத் தேடி ......

வானம் பொய்த்தாலும்
மிகுதியாய் பெய்தாலும்
விவசாயி கண்களில் மழை!

நதிகள் என்றால் முதலில் நீர்....
பின்பு மணல் ....
ஏதுமில்லை இப்போது!?

கவிதையாளனுக்கு
கற்பனைப் பஞ்சம்....
இலவசமாய் நிலா !

எழுதியவர் : வெ. நாதமணி (6-Jul-13, 5:33 pm)
சேர்த்தது : vnathamani
பார்வை : 86

மேலே