நடமாடும் தெய்வம்!!!!!!!

அன்புள்ள அன்னையே
மூன்றெழுத்துக் கவிதையே
பத்துமாதம் சுமந்து
கருவுக்கு உருகொடுத்தாய்
உதிரம் தந்து உருவம் தந்து
உயிர் தந்து உறவு தந்து
உரிமை தந்து ஊக்கம் தந்து
என்னை உயரச் செய்தாய் தாயே!
உன் இரத்தத்தை உணவாக்கி
என் உயிர் வளர்த்தாய்
உன் கண்ணிமைக்குள்
என்னை கைதியாக்கினாய்
உன் உறக்கம் விற்று
நான் பரிசுகள் பெற்றேன்
இன்பங்கள் அனைத்தும்
இல்லத்தில் அளித்தாய்
தாயே! உனக்கு அளிக்க என்னிடம் என்ன இருக்கிறது?
நீ எனக்கு அளித்த உயிரைதவிர!
வேண்டும் மீண்டும் ஒரு ஜனனம் உன் வயிற்றில்!!

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (7-Jul-13, 6:28 pm)
பார்வை : 194

மேலே