+வாக்கு கொடுத்தால் காப்பாற்று!+

வாக்கு கொடுத்து
வாக்கு பெற்றாய்!
கொடுத்த வாக்கை
காற்றில் விட்டாய்!

காசு கொடுத்தும்
வாக்கை பெற்றாய்!
போக்கு காட்டி
புலம்ப விட்டாய்!

தூக்கம் தொலைத்து
தோள் கொடுத்தோம்!
துக்கம் கொடுத்து
தொலைந்து விட்டாய்!

ஜெயிக்கும் வரை
காலில் விழுந்தாய்!
ஜெயித்த பின்னே
கழுத்தை நெறித்தாய்!

பல பட்டணம்
பார்க்க பறந்தாய்!
சொந்த ஊரையோ
பார்க்க மறந்தாய்!

நீயும் ஓர்நாள்
தோற்றுப் போவாய்!
தொண்டன் நினைத்தால்
சிறையில் வாழ்வாய்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Jul-13, 12:36 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 95

மேலே