பார்த்து பார்த்து
பார்த்து பார்த்து வாங்கினாள்
சேர்த்து சேர்த்து வை த்த பணத்திலிருந்து .
தடவி தடவிப் பார்த்தாள்
தேடித் தேடி வாங்கிய பொருளை
திருப்பித் திருப்பிப் பார்த்தாள்
புத்தம் புதிய பொருளை
எண்ணி எண்ணிப் பார்த்தாள்
பணத்தை மறுபடியும் மறுபடியும்
எண்ணி எண்ணி வாழ்கிறாள்
ஒவ்வொரு காசையும்
எத்தனை தடவைப் பார்த்து வாங்கினாலும்
மனது ஒப்பவில்லை
எத்தனை முறை எண்ணினாலும்
மனதுக்கு நிம்மத்யில்லை
அவளும் வாழ்கிறாள் இவ்வுலகில்
எல்லோருக்கும் பாரமாக