மனிதனை பார்த்து மனிதனே பயம் கொள்ளலாமா ?

காடுகளை சுற்றி திரிந்து கர்ஜனைகள் ஒங்க எழுப்பி
பார்க்கின்ற உயிரினங்களை எல்லாம்
பசிக்காக பலியாக்கும் சிங்கத்தை பார்த்தும்
மனிதனுக்கு பயம் வரலாம் .................

அதீத பலம் கொண்டு ஆங்கார கோபம் கொண்டு
பார்த்தவைகளை எல்லாம் மிதித்து கொல்லும்
மதம் பிடித்த யானையை பார்த்தும்
மனிதனுக்கு பயம் வரலாம் ..............

ஓடுகின்ற நதியினிலே ஓடம்போல் மிதந்து
பதுங்கி பதுங்கி அனைத்தையும் கொல்லும்
முதலையை பார்த்தும்
மனிதனுக்கு பயம் வரலாம் ................

கூட்டமாய் கூடியிருந்து
சூழ்ச்சி செய்து ஆளைக்கொல்லும்
குள்ளநரி கூட்டத்தையும் பார்த்து
மனிதனுக்கு பயம் வரலாம் .............

ஓரினமாய் பிறந்திருந்தும்
ஒருவரை ஒருவர் புரிந்திருந்து
கூட்டமாய் வாழ்ந்திருக்கும் மனிதனை பார்த்து
மனிதனே பயம் கொள்ளலாமா ?

எவ்வுயிர்க்கும் இல்லாத கொடுமை இது,
மிருகங்களை பார்த்து பயந்தவன்
இன்று மனிதனை பார்த்து
பயம் கொள்ளலாமா ...........

உள்ளொன்று வைத்து
புறம் ஒன்று பேசும் மனித உலகில்
மனிதனின் கொடூரம் மிருகத்தையும் தாண்டிவிட்டது ,ஆம் எதிரில் நகைப்பான் மறைவில் பகைப்பான்............

பிறப்பெடுத்து உயிர்களிலே
பிற்போக்கு சிந்தனை மனிதனுக்கு
தன் இனத்தை தானே கொல்லும் கொடுமை
மனித இனத்திற்கு இது மானக்கேடு .................

உயிரை காப்பாற்ற
ஒற்றுமையோடு போராடும்
விலங்குகளிடத்தில் கூட
மனிதன் தோற்றுப்போகிறான் ........

ஆம்,
விலங்குகளிடத்தில் பதவி சண்டை இல்லை
பணத்துக்காக சண்டை இல்லை
சொத்துக்காக சண்டை இல்லை
சுகத்துக்காக சண்டை இல்லை ................

ஆறாவது அறிவை ஆண்டவன் கொடுத்தான்
அழிவின் பாதையை மனிதன் தேடினான்
பிறப்பு முதல் இறப்பு வரை
பிரச்சினைகளுடனே வாழ்ந்து மடிகிறான் .........

மனிதா, இனியாவது திருந்து
உன்இனத்தை பார்த்து நீயே பயம் கொள்ளும்
கேவலமான நிலைமை இனியும் வேண்டாம்
முதலில் நீ திருந்து முடிந்தால் மற்றவரை திருத்து...........

ஒருவரோடு ஒருவர் உண்மையான பற்று கொண்டு
உள்ளன்போடு பழகிப்பாறு
முதலில் உன்னை நீ நேசிப்பாய்
பிறகு எவரையும் நேசிப்பாய் ...............

எழுதியவர் : வினாயகமுருகன் (10-Jul-13, 10:08 pm)
பார்வை : 135

மேலே