விடாமுயற்சி
முயற்சி செய்!
நேரம் காலம் பார்க்காமல்
விடாது முயற்சி செய்!
விடாமுயற்சியின் விந்தையரிய
இதோ சில உண்மைத்துளிகள்...
ஆயிரம் முறை தோற்ற பின்பு தான்
கண்டு பிடிக்கப்பட்டது மின் விளக்கு
- தாமஸ் ஆல்வா எடிசனால்.
ஆயிரம் பேரால் சரியில்லையெனப்பட்ட பின்பு தான்
உதயமாயிற்று கே.எப்.சி.
- கொலொனல் சாண்டஷால்.
முண்ணூற்றிரண்டு முறை உதவி மறுக்கப்பட்ட பின்பு தான்
உருவாக்கப்பட்டது டிஸ்னி உலகம்
- வால்ட் டிஸ்னியால்.
பன்னிரண்டு முறை பதிப்பகத்தாரால் மறுக்கப்பட்ட பின்பு தான்
அச்சிலேறியது ஹாரி பாட்டர்
- ஜெ.கே.ரௌளினால்.
இருமுறை அனுமதி மறுக்கப்பட்ட பின்பு தான்
திரையிடப்பட்டது டைட்டானிக்
- ஸ்டீவென் ஸ்பீல்பேர்க்.
பட்டியலிட்டால்... அதுவும்
விடமுயற்சியாய் தொடரும்...
ஒவ்வொரு முறை தோற்கும் போதும்
புதிய ஜனனம் என்று எண்ணு;
பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழு;
முயற்சித்து பார்,
முற்றுமுனது கையில்.