என் கவிதை ஏலத்திற்காய்

இதோ...
என் கவிதை
ஏலத்திற்காய்

ஏலம் எடுக்க
வந்தவரே வாரும்
அதற்கு முன்
ஒரு சில கேள்விகளுக்கு
பதில் கொஞ்சம் தாரும்

என்னடா கேள்வியெல்லாம்
கேட்குறானே என்று
நினைக்கிறீரோ..?
சற்று பொறும்
இது நம்மை நாமே
கேட்கவேண்டிய கேள்விகள் தான்

ஊழல் செய்தவரெல்லாம்
உல்லாசமாயிருக்கிறார்
ஸ்பெக்ட்ரம் பெயர் சொல்லி
ஒட்டு வாங்கியவரும்
சுகமாயிருக்கிறார்
மூட்டைக்குள் ஒளிந்திருக்கும்
பணத்தை வெளியே கொண்டுவர
நாம் என்ன செய்ய போறோம்..?

சுவிஸ் வங்கியிலுள்ள இந்திய
பணத்தைக் கொண்டு வந்தால்
பல வருடங்களுக்கு இங்குள்ள
ஏழைகள் பசி தீரும் இந்தியாவின்
கட்டமைப்பும் மாறும்
என்கிறாரே.. அதற்காய்
நாம் என்ன செய்ய போறோம்..?

லஞ்ச ஊழல் தடுப்பு
கழகம் இருந்தும்
சிறு ஒப்புக்கும் கை நீட்டும்
முறை புற்று நோய் போல்
வளர்ந்து கிடக்கிறதே
அதைக் களைந்தெறிய
நாம் என்ன செய்ய போறோம்..?

அசையும் சொத்து
அசையாச் சொத்து
என்று இந்த நாடே
அரசியல்வாதியின் சொத்து
என்றாயிற்றே இந்நிலை மாற்ற
நாம் என்ன செய்ய போறோம்..?

இன்று இளவரசன்
கதையும் முடிஞ்சு போச்சு
நாளை யாரென்ற
கேள்வியும் எழுந்தாச்சு

ஒரு பக்கம் தமிழர்
குலம் அழிஞ்சே போச்சு
அதைத் தடுக்க பல
உயிரும் பலியாச்சு
அவர்களின் ஆத்மாவுக்கு
நாம் என்ன பதில் சொல்ல போறோம்..?

என் கேள்விகள் சரிதானா
என்று நீங்களே சொல்லுங்கள்
ஏதும் தவறிருந்தால்
இந்த ஏழையை மன்னியுங்கள்
அதற்கான பதிலிருந்தால்
முடிந்தவரை பலபேருக்கு
சொல்லுங்கள்.

ஏலம் தொடங்கியது
தாராளமாய்க் கேளுங்கள்.

எழுதியவர் : சங்கை முத்து (14-Jul-13, 9:04 am)
பார்வை : 92

மேலே