முதல் காதல் !
பட்டினியாய்
சில நாள்
பழைய சட்டையோடு
பல நாள் !
பண மரம்
வீட்டில் காய்ந்து
போய்
பாச மரம்
புயலில் வீழ்ந்து
போய்
ஒட்ட இடம்
இல்லாமல்
சருகுகளாய் ஓடித்
திரிந்த எனை
பசுமையாக்கி காதல்
பூந்தோட்டம் முனைந்த
என் முதல் காதல்
தேவதையே
மூச்சு இருக்கும் வரை
உன் நினைவுகள்
வந்து முட்டும் தினந்தோறும் !
நீயும் இருக்கிறாய்
நானும் இருக்கிறேன் - எங்கோ
ஆனால் வாழ்கிறோமா !
ஆக்கம்
கண்ணன்