பிரிவிடம் போய் கேள்!

என் உயிரே! அந்த வானத்திடம் கேட்டு பார் உன்னை எந்த அளவுக்கு என் மனதில் வைத்திருக்கிறேன் என்று!
அந்த காற்றிடம் கேட்டு பார் நான் உன்னை எந்த அளவுக்கு சுவாசிக்கிறேன் என்று!
அந்த மழையிடம் கேட்டு பார் உன்னை நினைத்து கண்ணீராய் வடிக்கிறேன் என்று!
அந்த மலையிடம் கேட்டு பார் உன்னை எந்த உயரத்தில் மனதில் வைத்திருக்கிறேன் என்று!
அந்த நிலவிடம் கேட்டு பார் எத்தனை தடவை உன் முகத்தை நிலவாக பார்த்தேன் என்று!
என் கண்களிடம் கேட்டு பார் எத்தனை தடவை உன்னை பார்த்தேன் என்று!
என் உதட்டிடம் கேட்டு பார் நொடி நொடியும் நினைக்கிறேன் என்று!
என் கால்களிடம் கேட்டு பார் நான் எத்தனை தடவை உன்னை தேடி நடந்திருக்கிறேன் என்று!
இவையெல்லாம் கேட்ட நீ அந்த பிரிவிடம் போய் கேள் ஏன் நம்மை பிரித்தது என்று!

எழுதியவர் : பூ.திலகம் (15-Jul-13, 6:17 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 106

மேலே