காற்றும் நீரும்..... இரவும் பகலும்.....

காற்றும் நீரும்..... இரவும் பகலும்.....
அந்த ஊர்க்கு துறவி ஒருவர் வந்தார்.
ஊர் மக்கள் அவரிடம்
"நீங்கள் எந்த ஊர்?
நீங்கள் என்ன சாதி?" என கேட்டனர்.
அதற்கு அந்த துறவி
"காற்றும் நீரும் என்ன சாதியோ அந்த சாதி நான்;
இரவும் பகலும் எங்கு வருகிறதோ அந்த ஊர் நான்" என்றார்.
உடனே அந்த ஊர் மக்கள் துறவியிடம் ஆசி பெற்றனர்.