சூலைத் திங்கள் பதினேழாம் நாள் 17.07.2013 பீகாரில் நேர்ந்த கொடுமை

பள்ளியில் சமைத்த உணவு
-பலிக்கு வழி வகுத்ததுவே
துள்ளி விளையாடும் குழந்தைகள்
-இதற்கு இரை யாயினரே
கழுவாத அரிசியினால்
-நடந்த துயரம் கண்டு
அழுவதா கல்லும் முள்ளும்
-கண்ணீர் கசியும் மன்றோ!
அலட்சிய போக்கின் விளைவால்
-மாணாக்கர் கனவுகளெல்லாம்
லட்சச் சிதறல்களாக நொறுங்கிப்
-போன கவலைகிடம் கண்டு
நீ இறங்கயோ?பராசக்தி!

எழுதியவர் : விவேக்பாரதி (19-Jul-13, 6:59 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 69

மேலே