வாலிக்கு வெண்பா

வல்லவன் வாலி
தென்னவன் வாலி
புல்லிடை தூங்கும்
பனித்துளி ஒத்த
நல்லவன் இவனே
பாட்டினால்,
மக்கள் துயரம் துடைத்தவன்
அவனே தமிழ்ப் புலவன்!
மண்ணுலகத்தில் பிடித்த
புகழ் போதாதென்று
விண்ணுலகத்தில்
ஆட்சி புரியும்
திண்ணமுடையான்
இந்திரன் தமக்கே
பாட்டெழுத வேண்டுமென்று
சந்திராயன் போல்
புறப்பட்டுவிட்டான் வாலி !!