கண்ண தாசனின் நகைசுவை ...07

பெருங்கதை !

திடீரென்று வெள்ளைச் சாமிக்கு சினிமாவுக்கு கதை வசனம் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது.

"பெரிய நடிகர்கள் நடிக்கின்ற படத்துக்குக் கதை எழுதினால் தான் முன்னுக்கு வரலாம் ! என்று யாரோ சொன்னார்கள்.

உடனே வெள்ளைச் சாமி பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

"கதாநாயகன் ராமு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். கதாநாயகி கமலா ஒரு ஆபீஸில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராகக் காதலித்தார்கள். ராமுவுக்கு வயது அறுபத்தொன்பது. கமலாவுக்கு வயது பதினாறு.."

- வெள்ளைச் சாமியின் கதை உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (19-Jul-13, 10:12 pm)
பார்வை : 248

மேலே