எடுத்துச் செல்ல மறந்த வாலி

ஒவ்வொரு மனிதனும் மண்ணில் பிறக்கையில்
மரணத்தோடுதான் வாழ்ந்து கொண்டுயிருக்கிறான்...!
ஒரு நாள் மரணம் தன்னை அழைக்கிறது...,
உடல் மண்ணிற்கும்...
உயிர் வானத்திற்கும் சமர்பிக்கின்றோம்...
மரணத்தை மட்டும் எடுத்து செல்பவர்கள் மனிதர்கள்...!
தன் மகிமையை விட்டு செல்பவர்கள்தான் மாமனிதர்கள்...!!

அந்த வரிசையில் வாலி...,,

"வாலிபம் முதிர்ந்தாலும்,
வாலிபம் தரும் பாடல்கள்...
கேட்க கேட்க....
முதுமையில்....
மரணமில்லை....
வார்த்தையில்லை...
பாராட்ட வாலியை...!"


"உடல் அழுகி போகும்...
அழுகைகள் நிற்க கூடும்...
உன் கல்லறையும் மண்ணோடு மண்ணாகும்...
ஆனாலும் மக்காது...,
மறவாது...,
உன் கவிதை என்றென்றும் உயிர் பிறக்கும்...,
அது வார்தைகளாலும்...,
பாடல்களாலும்...,
கேட்டு கொண்டுதான் இருக்கும்...!"


"நீ உன் உயிரை எடுத்து சென்றாலும்...
உன் கவிகளை எடுத்து செல்ல மறந்தாய்...
எங்கள் உணர்வுகளுக்காக...!"

எழுதியவர் : காந்தி. (20-Jul-13, 3:20 pm)
பார்வை : 69

மேலே