துன்பங்கள் ஆணி இல்லை!!!!!

நண்பா நண்பா நம்பிக்கையை
இழக்காதே
நீ வானம் நோக்கி வளரும் விழுது
என மறக்காதே ....

சிறகுள்ள பறவைக்கெல்லாம்
வானம் சிறிதுதான்...
சோகங்களை வானம் என்று எண்ணி
சிறகுள்ள பறவையாகு ...

நண்பா
நீயே உன்னிடம் தோற்காதே...
வாழ்வோடு
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பாடம்தான்
எதுவும் முடியும் என்று நினை ...

இயற்கையில் கலந்து
வண்ணத்து பூச்சி சிறகினில் ஏறி
வானவில்லை பிடித்து விடு ...
சூரிய ஒளியில்
நூல் ஒன்றே எடுத்து
பனி துளி கோத்து விடு....

நிலவுக்கு கால் இல்லை
இருந்தும்
வானில் நடக்கலையா?
அட விழுந்தாலும் வருந்தாமல்
அருவி சிரிக்கலையா ?
நீ மட்டும் ஏன் தோல்வியை கண்டு
துவண்டு போகிறாய்....

வளைவு இல்லை யென்றால்
மலை ஏறமுடியுமா?
சோதனை இல்லை என்றால்
வாழ்வை உணர முடியுமா?
ஏன் வெற்றியின்
ஏணி தோல்வி என
உணர மறுக்கிறாய் .....

துன்பங்கள் ஆணி இல்லை
வரும் வெற்றியின் ஏணி அது
நீ தலைகீழாய் பிடித்தாலும்
நிமிர்த்து நிர்க்குமே ...

வாசனை இல்லாத இலைகளுக்கும்
உன் சுவாசத்தில் வாசனை கொடுத்து விடு
முற்றுபுள்ளி முடிவிலும் கோலம்
ஒன்று போட்டு விடு...
ஜெய்க்கும் வரை நீ விழித்துக்கொண்டே
தூங்கு ....

மேற்கில் மறைவது எல்லாம்
மரணம் ஆவதும இல்லை?
கிழக்கு வெளிச்சம் தர மறந்து போனது இல்லை?
தலையை நீ குனித்தால்
அந்த வானம் தெரியாது உனக்கு
நம்பிக்கை என்னும் வானை
நோக்கி உன் தலையை
நீ நிமிர்த்து
உண்மையை நீ உணர்வாய்...

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (20-Jul-13, 3:57 pm)
பார்வை : 138

மேலே