மழைசாரல்

மழை வாசம்,
சுமந்த மண் காற்று,
சுழற்றி அடித்த,
வேகத்தில்,
மழை வரும் சூழல்,
உணர்ந்தேன்..

புழுதியில் நனைந்தபடி,
மேய்ச்சலில் இருந்த,
மாடுகளை,
விரட்டி ஓடுகிறேன்..

வேகமும் நடையுமாக,
மாடுகளை,
பின்தொடர்ந்தேன்.

அவைகள் என்னை,
அழகாய்,
அழைத்து சென்றன,
வீட்டிற்கு..

வீட்டின் முன் இருந்த,
தண்ணீர் தொட்டியில்,
தாகம் தீர,
நீரை பருகின..

மேய்ச்சல் திருப்தியில்,
நன்றியுடன்,
எனை பார்க்க,
அதன் மாட்டு சாலையில்,
மாடுகளை பிடித்து,
கட்டி,
அவைகள் முன்..
இரவுக்கு தீனிகளை,
போட்டேன்..

காற்றின் வேகம்,
குறைந்து,
சடசடவென்று,
மழை வேகம்,
பிடித்தது..

ஒரு துண்டை,
போர்த்தியபடி,
வேகமாய்,
வீட்டுக்குள் நுழைந்து,
திண்ணையில் அமர்ந்து,
சடசடத்த மழையை,
ரசிக்கிறேன்..

அருகிலிருந்த,
பெரியவர்களின் பேச்சுக்களில்,
நானும் கலந்து,
மகிழ்ந்த பொழுது,
என் பின்னிரவு,
கனவு கலைந்தது..

வெறுமையாய்,
தனித்து,
நகர தீவின்,
ஒரு ஒற்றை அறையில்,
வியர்வை புழுக்கத்தில்,
தனித்து இருக்கிறேன்
இன்று..

மனதின் கலவை,
உணர்வுகள்,
என்னுள் ஏக்கமாய்,
வடிந்தன.. —

எழுதியவர் : அரவிந்த் ராமசாமி (21-Jul-13, 9:37 pm)
சேர்த்தது : Sun Anand
பார்வை : 97

மேலே