ராசதந்திரம் பற்றிய ஒரு தோல்வி

கனவுகள் தீராமல்
நகரும் இப்பொழுதில்
நான் நோக்கி நடக்கும் தேசம்
எனக்கானதே
முன்பு ஒருபோதும் கேட்காத
ஏங்கொலி
எனக்குள் பிறப்பெடுக்க
என்னைச் சுற்றி
எம்மவர்
யாருமில்லாததையுணர்ந்தேன்.
தசாப்தங்களின் இருளகற்றிய
பேரொளியின் மூச்சை
அவ்வளவு எளிதாக அழிக்கமுடிந்திருக்கிறது
தோல்வியை ஒப்புக்கொண்டு
வெற்றியின் அருகில் செல்ல
பிரபஞ்சத் தந்திரங்களை
கையாளும் வல்லமை வந்து சேர்
என்னிடத்தில் .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (22-Jul-13, 9:49 pm)
பார்வை : 150

மேலே