சித்தர்கள் காட்டு ம் சாகாக்கலை !!!?

உலகில் வாழும் மனித இனமே ஆறு அறிவு
கொண்டது. மனித இனம் மட்டுமே இயற்கையை
வென்று வாழ தன உயர்ந்த அறிவுத் திறனைப்
பயன் படுத்தி வருவதை அறிவோம்.
பிறப்பு இறப்பு பற்றிய சிந்தனையைச் சீர் தூக்கி
சிந்தித்து வாழும் வகையை அறிய முயற்ச்சித்தான் .
மனிதன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று விரும்புவது இயற்கைதானே .
நீண்ட நாள் உயிர் வாழ பல மூலிகைகளை க்
கண்டுபிடித்து மருந்துகளை செய்த சித்தர்கள்
குறிப்பாக சில பாடல்களில் எழதிவைத்து
சென்றுள்ளார்கள்.
திருவள்ளுவர் ,திருக்குறளில்
நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல் (திருக்குறள் -948)

நோய் எனபது என்ன என்று அறிந்து நோயின்
காரணத்தை ஆராய்ந்து அந்நோயை நீக்கும் வழி கண்டுபிடித்து அதற்குரிய மருந்து கொடுத்து
நோயை நீக்கும் படியான செயலை செய்யவேண்டும் ,என்று விளக்குகிறது .
திருமூலரின் திருமந்திரத்தில் நோய் வராமல்
பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவையைக்
கூறுதலைக் காணமுடிகிறது .
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே !
உடம்பு அழிந்தால் உயிரும் அழியும் ,உறுதியான மெய்ஞானத்தை அடைய முடியாது , ஆகவே உடம்பை வளர்க்கும் வழி அறிந்து கொண்டு
உடம்பைப் பேணி வளர்த்தேன்
அதனால் உயிரையும் வளர்த்துக்கொண்டேன்! என்று திருமூலர் கூறியுள்ளார் .
உணவுக்கட்டுப்பாடு ,தியானம் ,ஒழுக்கம் ஆகியவற்றை கடைப்பிடித்தால் நீண்ட ஆயுள் வாழ முடியும் என்பதை நம் சித்தர் பலர் வாழ்ந்து காட்டியுள்ளார்கள் .
அகத்தியர்
உண்ணும்போது உயிர் எழுத்தை உயர வாங்கி
உறங்குகின்ற போதெல்லாம் அதுவே ஆகும்
பெண்ணின் பால் இந்திரியம் விடும்போ தெல்லாம்
பேணியே வளம் நோக்கி நிலையத்தா யாகில்
திண்ணும் காய் இலைபழங்கள் அருந்தும் போதும்
தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார்
மண்நூழி காலமட்டும் வாழ்வார் பாரு !
மறலிகையில்அகப்படவும் மாட்டார் தாமே!

இப்பாடலில் மூச்சு விடும் முறையறிந்து பயிற்சி செய்தால் இப்பூமி உள்ள வரையில் எமன் கையில் சிக்காமல் நீண்டநாள் உயிர் வாழ்வார் என உறுதிபட கூறியுள்ளார்

அவ்வையார் தம் குறளில்
நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளி காணின்
,முற்றும் அழியா துடம்பு ,எனக் கூறியுள்ளார்
புருவ நடுவில் நாடு நாடியாகிய சுழுமுனையில் சூரிய கலையும், சந்திரகலையும் ஒடுங்கும்போது சுவாசம் மிகவும் குறைந்து காணப்படும் . சுவாசம்
குறைந்து,குறைந்து இயக்கம் இல்லாமல் மனமும்
ஒடுங்கும் அப்போது புருவ மையத்தியானம்தொடர்ந்து நடைபெற்றால்மரணமில்லாப் பெருவாழ்வு வாழ இயலும் என்பதை நினைவூட்டுவதர்க்காகவே நெற்றிநடுவில்திலகமிடுதல் ,திருநீறு அணிதல் ,திருமண்இடுதல் போன்ற மரபுகள் தோன்றின
. தமிழ் மொழியை பேசுவதாலும் ஆயுள் நீடிக்கும்
திருமூலரின் திருமந்திரத்தில் "ழ" என்கிற எழுத்தை
உச்சரிக்கும் போது நாவின் நுனி வளைந்து மேல் நோக்கி அங்குள்ள மேலண்ணத்தை தொடுகிறது தமிழ் எழுத்தான "ழ்"லை உச்சரிக்கும் போதே ஆயுளை
நீடிக்கும் நுணுக்கமான யோகா

முறைதிருமந்திரத்தில் காணமுடிகிறது .

நாவின் நுனியை நடுவே சிவிறிடில் சீவனுமஅங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சதாகொடி ஊனே
"ழ்"கரத்தின் உச்சரிப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு . தமிழ் என்ற சொல்லிலேயே சாகாக்கலை யின் முத்திரையை காணமுடிகிறது .
சாகாக்கலையை பயில அடிப்படையாக இருப்பது சித்தர்களின் பாடல்கள் . மேலும் திருக்குறளில்
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப் பட்டவர்க்கு இதில்
தவத்தினால் பெற்ற ஆற்றல் சக்தியினால் மரணம்
விளைவிக்கக் கூடிய கூற்றுவனையும் தாண்டி நீண்ட நாள் உயிர் வாழ்தல் கூடும் என்று கூறியுள்ளதை நினைவுகொண்டு வையத்துள் வாழ்வாங்கு வாழமுற்படுவோம் .
வாழ்க சித்தர் வழி , வாழ்வோம் சித்தர் நெறி !!!

எழுதியவர் : (22-Jul-13, 11:01 pm)
பார்வை : 697

மேலே