தெய்வப்பிறவியாய் மாற....
வேற்றுமைச் சிந்தனை வெறுப்போம்!
ஒற்றுமையை எங்கும் விதைப்போம்!
தேசமே பெரிதெனக் கொள்வோம்!
தெருவெங்கும் தூய்மை தெளிப்போம்!
சுறுசுறுப்பு நதியில் குதிப்போம்
சுடராய்ச் செயல்களை முடிப்போம்!
செயற்கைப் புன்னகை தவிர்த்து
இயற்கையாய் வாழ்வை ஏற்போம்!
பாசத்தின் மலராய் விரிந்தால்
நட்புச் சோலைகள் பூக்கும்!
பண்பின் உருவாய் வளர்ந்தால்
பாரதம் உன்னை வணங்கும்!
நேர்மையான நெஞ்சம் இருந்தால்
நெருப்பின் மீதும் படுக்கலாம்
தேசநலன் செயலில் இருந்தால்
தெய்வப் பிறவியாய் மாறலாம்!ॐ