உன் நட்பின் புனிதம் தேடி……
உன் நட்பின் புனிதம் தேடி……
மௌனப் புன்னகையில்
முதல் சந்திப்பு
இருவருக்கும்….
இருவரும்
ஒரு வரி பேச
தயங்கி நின்ற
கல்லூரி வாசல்….
ஏனென்றால்
நானோ
பட்டை அணியும்
முருகபிரான் வம்சம்
அவளோ
பொட்டு அணியாத
இயேசுபிரான் வம்சம்
மதங்களை உடைத்தது
நட்பின் பாசம்….
ஆடை,அலங்காரம்
இல்லாத
இந்த அழுக்கனையும்
அரவனைத்த அன்பின்
தெரசா அவள்...
என்னுடைய
கஷ்டங்களுக்கு
சிலுவையின் முன்
அவளின் அழுகையும்,
அவளுடைய
கஷ்டங்களுக்கு
கோவில் கருவரை முன்
என்னுடைய அழுகையும்
நிஜமாகவே
நிறம் மாறிய
இரு தெய்வங்களும்
இடம் மாறிக்கொள்ள
ஒரு வாய்ப்பு தேடும்….
என் தவறுகளுக்கு
தலையில் குட்டு
வைத்த
அவளின் அன்பும்
அவள் கோபத்திற்கு
வார்த்தைகளற்ற
என் தலைகுனிவும்
எங்களை
நாகரீக நட்பில்
நடைபோட வைத்தன…
இறுதியாண்டு
என் இதயத்தில்
கண்ணீரை வரவழைக்கிறது...
உன் நட்பின்
புனிதம் தேடி
காசி செல்வதா?
ராமேஸ்வரம் செல்வதா?