சிறிய கோப்பை

மழை
ஆசைக் கோப்பைகளை நிரப்புகின்ற மழை
மனிதக் கூட்டம்
தத்தம் கோப்பைகளை ஏந்தி நிற்கிறது
நானும் நின்றேன்
எனக்கான கோப்பையுடன்
எனது கோப்பையில் நிறைந்து ததும்பி
வழியட்டும் இம்மழை
எத்தனைக் கனமாயினும் ஏந்தி கொள்வேன்
யாருக்கும் கொடேன்
மழை நின்று விட்டது
நான் அழுது கொண்டிருக்கிறேன்
பகுதியளவே நிரம்பியிருக்கிறது எனது கோப்பை
அண்மையில் ஒருவன்
அவன் அழவில்லை
ஆடிக் கூச்சலிடவுமில்லை
அமைதியாய் நின்று கொண்டிருக்கிறான்
முழுமையாய் நிரம்பியிருக்கிறது அவனது கோப்பை
என்னால் நம்பவே இயலவில்லை
எவ்வளவு சிறிய கோப்பை அவனுடையது

எழுதியவர் : சுரேந்திர பாபு (29-Jul-13, 9:00 pm)
பார்வை : 104

மேலே