தோல்வி உனதல்ல

வெற்றி ஒன்றும் எளிதல்ல
தோல்வி என்றும் உனதல்ல
இரண்டும் கலந்த அனுபவ பாதை
வகுக்கும் உனக்கோர் உன்னத வாழ்வை
சோர்ந்து மட்டும் போகாதே
வீழ்ந்தால் துவண்டு மாளாதே
உற்சாகம் என்றும் இழக்காதே
தோல்வியின்றி சரித்திரம் கிடையாதே
மனமதை உறுதியாய் மாற்றிவிடு
வரும் தடையை துணிந்து தாண்டிவிடு
சோம்பலை அறவே தள்ளிவிடு
இதுவே வெற்றியின் கோட்பாடு