நம்பிக்கை மூச்சு !!
விழுந்தவன் எழுந்தால்
வெற்றி நிச்சயம்!
வெற்றிமேடு என்று
ஒன்று இருப்பதை ப்
பள்ளமான தோல்விதானே
உறுதி செய்கிறது !!
மழைத்துளி
கீழே இறங்கினால்தான்
நிலம் வளம் பெரும் !
தோல்வி த் துளி
நம்பிக்கை நிலத்தில்
வீழ்ந்தால்
வெற்றிப்பயிர் நிச்சயம் முளைக்கும் !
விழுந்தவன் எழுந்தால்
வெற்றி நிச்சயம் !!