பவுடர் நமது பண்பாடு அல்ல

பவுடர் போட்டுப் பழகாதே
பண்பாட்டை மறக்காதே என்றேன்

பணிவோடு இயற்கைப் பெண்
பக்குவமாய் அதைப் பழகி

பனிமூட்டம் விலக்கிக் கொண்டாள்
பரிதி மஞ்சள் பூசியபடி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Aug-13, 6:46 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 84

மேலே