என் இதயத்தை திருப்பி கொடுத்துவிடு 555

என்னவளே...

நீ கேட்ட
உன் வாழ்கையை...

கொடுத்து
விட்டேன்...

நீ வாங்கிய
என் இதயத்தை...

திருப்பி
கொடுத்துவிடு...

இதயம் மட்டும் உனக்கு
சொந்தம் என்கிறாய்...

என் சுவாசத்தை
ஏற்க மறுத்துவிட்டாய்...

உன் விழிகள் உனக்கு
சொந்தம் என்றாலும்...

இமைகள் எனக்கு
சொந்தமடி...

உன் விழிகள்
சிந்தும்...

துளி
கண்ணீர் கூட...

என் அனுமதி
இன்றி சிந்திவிடாதே...

என் விழிகள்
ஈரமானாலும்...

உன் விழிகளில் புன்னகையை
காண வேண்டுமடி...

என்றும் நான்...

உயிரானவளே...

உன் நலம் விரும்பும்
ஒரு காகித பூ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Aug-13, 6:53 pm)
பார்வை : 222

மேலே