சட்டம் ஒரு சிலந்திக் கூடு !!
சிலசமயம் _
சட்டம் நல்லவர்க்கு ப்
பாதுகாப்பு
கெட்டவர்க்கு கிலி!
சட்டம் ஏழைகளை
வாட்டி வதைக்கிறது
சட்டத்தை செல்வர்கள்
ஆட்டிப் படைக்கிறார்கள்!
சட்டத்தை மக்கள்
மதிக்க வேண்டும் என்றால் ?
மதிப்புக்குரியதாய் சட்டத்தை
இயற்றவேண்டும்
அரசு நிலைபெற
நீதிபதிகள் சட்டத்திற்கும்
மக்கள் நீதிபதிகளுக்கும்
கீழ்ப்படியவேண்டும் !
சட்டம்
எனபது எலிப்பொறி !
உள்ளே நுழைவது எளிது
வெளியே வருவது கடினம் !!
சட்ட ம் சிலந்திக்கூடு - அதில்
சிறியப் பூச்சிகள்
சிக்கிக் கொள்ளும்
பெரிய வண்டுகள் தப்பிவிடும் !
சட்ட எண்ணிக்கை அதிகமாக அதிகமாக
சட்ட மீறல்களும் அதிகமாகிறது !
சட்டங்கள் குற்றங்களை
அம்பலப் படுதுகின்றனவே தவிர
குற்றங்களை போக்குவதில்லை !
சட்டம் அடிமட்டமே -இல்லாத
ஒரு பெரிய குழி !
சிலநேரம் சட்டம் உறங்கும் !
ஆனால் சாவதில்லை !
சட்டம் எவரையும்
விட்டு வைக்காத
மரணம் போன்றது !!
ஆனால் ?????????
போர்க்கருவிகளின் முன்னே
சட்டங்கள் மௌனமாகிவிடுகின்றன!!!