வானம் நோக்கிக் காத்திருப்போம்

வண்ணமிகு மாலைப் பொழுதா
வசந்தமிகு மனதின் எழுச்சியா !

வானவில் விரிந்திட்ட வானமா
வாழ்வின் நிறம் கலந்த நேரமா !

வானத்தின் வர்ண கோலாட்டமா
வர்ணங்கள் வானத்தில் தஞ்சமா !

வர்ணங்கள் மாற்றிய ஓவியமா
வானம் பேசும் வண்ணக் காவியமா !

வாழ்வில் நாமும் காண முடியுமா
வாடைக் காற்றுடன் வண்ணங்களை !

வண்ணம் மிகுந்த எண்ணங்களுடன்
வானம் நோக்கிக் காத்திருப்போம் !

எழுதியவர் : பழனி குமார் (5-Aug-13, 9:02 am)
பார்வை : 89

மேலே