நினைத்து என்ன செய்ய ?
கண்ணுறங்கும் நேரத்திலே
கவி படைத்தான்
காலுரும் சமயத்திலே
கவி பாடினான்.
மனம் ஓடும் பொழுதிலே
கவிதை தொகுத்தான்
கைமாறும் காலத்திலேயே
வாரி வழங்கினான் கவி இன்பத்தை
அளித்தது கவிதை
அவனுக்கு எல்லாம்
பேர், புகழ் பெருமை
ஒன்று அவனுக்கு
கிட்டவில்லை எந்நேரமும்
சொல்லித் தான் தெரிய வேண்டுமா
பணம் சேரவில்லை
சேரவேயில்லை எக்காலத்திலும்
இருந்தும் பாடினான்
முச்சுள்ளவரை.
இன்று நினைக்காதவர்கள்
இல்லை அவனை
நினைத்து என்ன செய்ய ?