எழுத்து வங்கியே வாழி ....... !!!!!
எண்ணச் சிதறல்களை
கிறுக்கி வைத்தேன்
தாளினிலே..... !
நைந்து கிழிந்தது தான் மிச்சம் ...!!
அகவை ஐம்பதைக் கடந்தாலும்
அள்ளக்குறையா ஆர்வத்தால்
அறிவுக்கு எட்டியவரை
அமுதகவி நான் படைப்பேன் .... !!
பொன்னியின் வெள்ளம்போல்
பொங்கிவரும் நினைவுகளை
பொறுமையாய் சேர்த்து கோர்த்து
பொலிவான கவிச்சரமாக்கிடுவேன் .... !!
ஏட்டினிலே எழுதி வைத்தால்
எனக்குப் பின்
எடைக்குப் போகும் ..... !
எழுத்து .காம் - ல்
பதிந்ததனால்
என் எழுத்து
சிரஞ்சீவி யாகும் ......!!
என்ன தவம் செய்தேன்
எழுத்து .காம்
என்னை தன்னுடன்
இணைத்துக்கொள்ள ....!!
தளம் தந்து ஆதரித்தாய் !
களம் புகுந்து கவிபுனைவேன் !
உளம் குளிர வாழ்த்துகிறேன் ...!
எழுத்து வங்கியே வாழி ....!!வாழி ....!!!