பலர் நிறைந்த சபையினிலே
என் கன்னத்தை
உரசி செல்லும்
உன் முந்தானை.......
என் ஆசையை
தூண்டி செல்லும்
உன் கொலுசு ஒலி......
என் ஆர்வத்தை
தட்டி எழுப்பும்
உன் சிணுங்கல் சத்தம்....
மெல்ல மெல்ல
என்னை உன் வயப்படுத்தும்
மோகன பார்வை
என்று எத்தனை எத்தனை
விதமாக பெண் பற்றி
கொஞ்சி கெஞ்சி பாட??
என்றெல்லாம் நினைத்துப் பார்த்தால்....
முன் நெற்றியில்
முடிக்கற்றை இல்லாத,
சுண்டி இழுக்கும் சிவப்பு நிறம் இல்லாத,
கம்பீரமான உயரம் இல்லாத
நுனி நாக்கில் ஆங்கிலம்
பேசத் தெரியாத,
பலர் நிறைந்த சபையினிலே
பேசவே தெரியாத
நான் எப்படி
ஒரு பெண் பற்றி கவி பாட??
அவள் எப்போது என்னை திரும்பி பார்க்க???