உயிர் தொலைத்த ஒற்றை ரோஜாவுக்கு....

உனக்காகத் தான் எழுதுகிறேன்...
வெடித்து சிரித்த வெள்ளை ரோஜாவை
பறித்து தனியே பிரித்து
தன் கூந்தலில் சூடிக்கொண்டாள்
தான் சூடியதால் ரோஜாவின் கடமை
தெளிவுற்றதாய் எண்ணிக்கொண்ட அவள்
தூரம் தூரம் தொலைந்தேபோக
கருமேக நிலவாய் தலைக்காட்டிய ரோஜாவும்
மறைந்தே போனது......
அழுத செடிக்கு ஆருதலாய்
அருந்த தண்ணீரைத் தந்து
ரோஜாவின் நினைவில் மெல்ல நகர்ந்தேன்...
சாலையோர சிக்னல் ரோஜாவின் அழகில்
அதிர்ந்து போய் நிர்பதை அரிந்துகொண்டேன்...
சட்டென்று எதிர்பாரா வேகத்தடையில்
நிலைத்தடுமாரி தரையில் விழுந்த ரோஜாவோ
தப்பிக்க வழிதேடி தலைகுணிந்து கிடந்தது
நடுவீதியிலே...
விரைவுப் பேருந்தின் விரட்டும் சத்தத்தில்
விருட்டென வாகனத்தை நகர்த்திச்சென்ற,என்
செவிகலோடு சேர்ந்தே வந்தது
ரோஜாவின் அழுகுரல்
தாளாமல் திரும்பிச்சென்றேன்
பாதி உயிர் உடைந்து கிடந்தவளை
தென்றலாய் தாங்கிக்கொண்டேன்...
தெய்வத்திரு பாததில் தலைசாய ஆசைகொண்டாள்
சொல்லியவிடம் சேர்த்துவிட்டு...
இரங்கலுக்கு இரக்கம் சொல்ல உனை சூட்டுவோர் முன்னே
உன் இர்ங்கலுக்கு கவிமலராய்
உனக்காகத்தான் எழுதுகிறேன்......

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (11-Aug-13, 6:52 pm)
பார்வை : 146

மேலே