தமிழ் கவிதை எழுதுங்கள் - நீங்களும் குழந்தை

வீட்டுக்குள்ளே பூக்கள் வளர்ப்பேன்
விருட்டென விருட்டென நானும் சிரிப்பேன்

காண்போர் கண்ணில் கவிதை வடிப்பேன்
கலர்போல் சாக்லேட் கன்னம் ஜொலிப்பேன்

ஆளின் தோற்றம் அடையும் வரைக்கும்
ஆண்டவன் உருவில் அழகாய் தெரிவேன்

ஆறடி உயரம் வளர்ந்த பிறகு
ஆனந்த உலகம் நானும் ரசிப்பேன்

அப்போதும் குழந்தையாய் நானுமிருப்பேன்
அழகியே தமிழ் கவிதை எழுதிய படியே...........

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Aug-13, 7:55 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 111

மேலே