அவளே அவளே!..

முல்லை சிரிப்பினள்
புன்னகை முகத்தினள்
பதுமையின் அழகினள்
தேனினும் இனிதினள்
சொல்லில் கனியினள்
தீந்தமிழ்க் குரலினள்
நல்லரும் குணத்தினள்
இதயத்தில் கரும்பினள்
மனதினில் அமிழ்தினள்
அவளே அவளே என்
அகத்தினில் தோன்றினள்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (13-Aug-13, 11:36 pm)
பார்வை : 95

மேலே