இதுதான் காதலோ...!

கவிதை எழுதச்சொல்லிக் கேட்கின்றது மடல்
இதுதான் காதலோ...!

கண்களை ரசிக்கச் சொல்லிக் கேட்கின்றது கடல்
இதுவும் காதலோ...!

அவளைப் பார்க்கச் சொல்லித் தூண்டுகிறது பருவம்
இதுதான் காதலோ...!

நெஞ்சில் பதிக்கச் சொல்லி வேண்டுகிறது அவள் உருவம்
இதுவும் காதலோ...!

விழிகள் பேசுகின்ற மொழிகள் புரிகிறது
இதுதான் காதலோ...!

அவள் விரல் பிடிக்கும் போது புது உலகம் தெரிகிறது
இதுவும் காதலோ...!

அவள் புன்னகையில் புதைந்து போனேன்
இதுதான் காதலோ...!

அவள் பார்வையில் சிதைந்து போனேன்
இதுவும் காதலோ..!

எழுதியவர் : மணிகண்டன் குரு (13-Aug-13, 11:51 pm)
சேர்த்தது : Manikandan Guru
பார்வை : 106

மேலே