ரோஜாவின் சோகம்

பூக்களின் ராணி நான்
பூவிதழ் மேனி தான்
ராஜாக்கள் கை பட்டு
ரோஜாக்கள் நாங்கள் சாக ..........

பூஜைக்கென்று பிறந்தவள்
புன்னகைத்து இருந்தவள்
பினத்திற்க்கா மாலையாவோம்
பிறர்மிதித்தா நாங்கள் சாவோம் ..........

பூத்திருக்கும் அழகாலே
காத்திருக்கு ஆபத்து
காதலுக்கு தூதுபோய்
கால்களுக்கா இதமாவோம் .........

முட்களுக்குள் பூத்திருந்தும்
அபகரிக்கும் கைகளுண்டு
அழகோடு வாசம்சேர
அதனால்தான் கண்ணீரே .........

வேலிக்கு உள்ளிருந்தும்
வேதனைக்கு உள்ளாக
நாளைவாழ்வை நாங்கள் எண்ணி
இரவினிலே கண்ணீர் சொட்டும் ...........

ரசிப்பதற்கு ஆளில்லை
பறிப்பதற்கு ஆளுண்டு
மென்மைகொண்ட பூக்கள் நாங்கள்
வன்மைக்கு உள்ளாவோம் ...........

விதையிட்டு நீரூற்றி
வளர்த்தவன் அழகுபார்க்க
வினைவைக்க வருவானே
சிலர் வேதனையை தருவானே .........

மலருக்கும் மணமுண்டு
மங்கைக்கும் மனமுண்டு
இரண்டுக்குமே இறைவன் தந்தான்
எவரோ கொல்லும் வாழ்க்கையைத்தான் ........

எழுதியவர் : வினாயகமுருகன் (15-Aug-13, 8:26 pm)
பார்வை : 49

மேலே