சேவையில் தோய்ந்திடின்
காத்துக் காத்திருந்து
உயர்வொன்று வாழ்வில்
பெற்றபோது உதவினோரை
மறந்ததுண்டா...?
பிறர்க்கு உதவினதை
என்றேனும் நினைந்து
சுட்டியதுண்டா...?
'இல்லை' யென்பது
பதிலானால் 'பண்பு '
என்பது நம்வசம் .....
வளரும் பிஞ்சு
உவர்ப்பெனினும்
கனியும் போதுதான்
இனிப்பது கூடும்.
அதுபோல்
சேவைதனில்
தோய்ந்து விட்டால்
தேவைகள் நீங்கும்.
தேவை நீங்கிய
மனம் எதுவோ அது
செம்மை பெற்று ஒளிரும்..
பக்குவமாகி மலரும்.