எனக்கொரு முதியோர் இல்லம்
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
ஆசியோடு நடந்த திருமணம்
அன்பாய் கொஞ்சும் ஆசை பிள்ளை
அதுதான் இல்லை இதுவரை ........
காலம் கடந்தும் காத்து கிடந்தும்
கையில் கிடைக்கல மழலை ஒன்று
கர்ப்பம் தரித்து கருவை சுமக்கும்
வரமும் கிடைக்கல் இதுவரை ..........
சுகமாய் தொடங்கிய வாழ்க்கை அது
சோகங்களை சுமந்து ஏக்கம் கொள்ள
வாரிக்கொடுத்த வாழ்த்துக்கள் எல்லாம்
வரங்களாய்மாற தயக்கம் ஏனோ .......
ஏக்கம் தவிர்க்க இன்பம் சேர்க்க
ஊடிவளர்த்தோம் உறவுப்பெண்ணை
தோலின் உயரம் தொட்ட உடனே
தேடிப்போனால் பெற்ற உறவை .........
ஆசையாய் வளர்த்த அவளோ பறக்கையில்
அனாதையானோம் நாங்கள் இன்று
நாடி போக ஒருத்தரும் இல்லை
தேடி வரும் உறவும் இல்லை ........
இன்றைய வாழ்வு ஏக்கம் கொள்ள
நாளைய வாழ்க்கை பயத்தால் கொல்ல
முதிர்ந்து ஒதுங்கும் காலம் வந்தால்
எங்கு போவது ஒன்னும் புரியல ..........
நாளைதேடும் நமக்கான இடத்தை
இன்றேதேடி இடம் பிடித்துவிட்டேன்
எனக்கென வீடு இல்லாமல் போனாலும்
இறுதியாய் எனக்கோர் முதியோர் இல்லம் ........